Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 21/02/2016

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 21/02/2016

403
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 6.30 – 7.30
மாலை – 3.30 – 4.30 மாலை – 4.30 – 6.00  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: பூராடம்


mesahamமேசம்: கடந்த இரண்டு நாளாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலித மாகும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.


rishabamரிஷபம்: உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தன்னிச்சையாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.


mithunamமிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கன மாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். அக்கம்-பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியரின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.


kadakamகடகம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.


simamசிம்மம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். உங்கள் சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் உங்கள் நிர்வாக திறமை வெளிப்படும். நன்மை கிட்டும் நாள்.


kanniகன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


thulamதுலாம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை நீங்கள் முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


viruchigamவிருச்சிகம்: இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.


dhanusuதனுசு: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.


magaramமகரம்: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும்.பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். இனிமையான நாள்.


kumbamகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதா யம் உண்டு. தடைகள் உடைபடும் நாள்.


meenamமீனம்: பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.