Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 22/05/2016

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 22/05/2016

334
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30
மாலை – 3.30 – 4.30  மாலை – 4.30 – 6.00  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை


mesaham

மேசம்: தையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள்  வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.


rishabam

ரிஷபம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பயணங்களால் ஆதாயமடைவீர்கள். வி.ஐ.பிகள்  அறிமுகமாவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும்  நாள்.


mithunam

மிதுனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.  வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மதிப்புக் கூடும் நாள்.


kadakam

கடகம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.  வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.


simam

சிம்மம்: இன்று நீங்கள் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. வெளிவட்டாரத்  தொடர்புகள் விரிவடையும். உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.


kanni

கன்னி: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் தெரியும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக்கு கூடும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த  ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். சாதிக்கும் நாள்.


thulam

துலாம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும்.  உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 1.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள். 


viruchigam

விருச்சிகம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும், எதிர்பாராத இடத்திலிருந்து வந்து சேரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். பழைய கடனைப்  பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். சிறப்பான நாள். 


dhanusu

தனுசு: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாயாரின் உடல் நலம் சீராகும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும்.  வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பார்கள். எதிலும் எச்சரிக்கை  தேவைப்படும் நாள்.


magaram

மகரம்: இன்று நீங்கள் முன்கோபத்தை குறையுங்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை  உணர்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி  பெறும் நாள்.


kumbam

கும்பம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சிலருக்கு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.  வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


meenamமீனம்: இன்று உங்களுக்கு உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். பரணி நட்சத்திரக்காரர்கள் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here