Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 24/01/2016

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 24/01/2016

406
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 8.30 – 9.00
மாலை – 3.30 – 4.30 மாலை – 4.30 – 06.00  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: பூராடம்


mesahamமேசம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.


rishabam

ரிஷபம்: இன்று நீங்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். உங்கள் பலம் எது பலவீனம் எது என நீங்கள் உணர்வது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். மாலையிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.


mithunamமிதுனம்: தடைகளை கண்டு நீங்கள் தளரமாட்டீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உங்களின் பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.


kadakamகடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.


simam

சிம்மம்: ராஜதந்திரமாக நீங்கள் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தொட்டது துலங்கும் நாள்.


kanniகன்னி: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சி பலிதமாகும் நாள்.


thulam

துலாம்: குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.


viruchigam

விருச்சிகம்: முன்கோபத்தை குறையுங்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்பது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து மகிழ்ச்சி தங்கும் நாள்.


dhanusu

தனுசு: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். சகோதர வகையில் பிணக்குகள் வரும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


magaram

மகரம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய் வீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். இனிமையான நாள்.


kumbamகும்பம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.


meenamமீனம்: இன்று நீங்கள் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.