Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 25/12/2016

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 25/12/2016

112
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.45 – 8.45    
மாலை – 3.15 – 4.15  மாலை – 4.30 – 6.00  மாலை – 12.00 – 1.30

                             சந்திராஷ்டமம்: அசுபதி


mesahamமேசம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். உறவினர்களுடன் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.


rishabam

ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதித்துக் காட்டும் நாள்.


mithunam

மிதுனம்: இன்று உங்களது பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.


kadakamகடகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.


simamசிம்மம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.


kanniகன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


thulamதுலாம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். புது வேலை அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள். 


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சிறப்பான நாள்.


dhanusuதனுசு: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


magaram

மகரம்: இன்று நீங்கள் எதையோ இழந்ததை போல் ஒருவித கவலைகள் வந்து நீங்கும். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


kumbamகும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


meenamமீனம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here