Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 26/06/2016

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 26/06/2016

411
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30
மாலை – 3.30 – 4.30  மாலை – 4.30 – 6.00  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: மகம்


mesahamமேசம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டியிருக்கும். எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


mithunam

மிதுனம்: இன்று உங்களுக்கு திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்
தியமாக சமாளிப்பீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். மாலைப் பொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.


kadakamகடகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.


simamசிம்மம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தைரியம் கூடும் நாள்.


kanniகன்னி: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


thulamதுலாம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.


dhanusu

தனுசு: இன்று நீங்கள் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.  


magaram

மகரம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.  மனைவி வழியில் ஆதரவு பெருகும். தாயாரின் உடல் நலம் சீராகும். திடீர் பயணங்கள் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.


kumbamகும்பம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள்.  உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.


meenamமீனம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here