Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 27/03/2016

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 27/03/2016

297
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30
மாலை – 3.30 – 4.30 மாலை – 4.30 – 6.00  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: அசுபதி


mesahamமேசம்: எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியம் ஒன்று முடியும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப் பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


rishabamரிஷபம்: இன்று நீங்கள் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் குழப்பம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் சிறுசிறு நட்டங்கள் ஏற்படக்கூடும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்துப் போகும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


mithunamமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


kadakamகடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். கனவு நனவாகும் நாள்.


simamசிம்மம்: பழைய பிரச்னைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்துப் போகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்.


kanniகன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிரபலங்கள் அறிமுக
மாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.


thulamதுலாம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களை நம்பி சிலர் பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு, வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.


viruchigamவிருச்சிகம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கைத் தருவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


dhanusuதனுசு: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். தாணுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.


magaramமகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். உற்சாகமான நாள்.


kumbam

கும்பம்: இன்று உங்களை சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சி வசப்பட்டு கத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நாவடக்கம் தேவைப்படும் நாள்.


meenam

மீனம்: ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.