Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 28/02/2016

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 28/02/2016

310
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30
மாலை – 3.30 – 4.30 மாலை – 4.30 – 6.00  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி


mesahamமேசம்: கடந்த இரண்டு நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


rishabamரிஷபம்: இன்று உங்களுக்கு சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


mithunamமிதுனம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து விலகும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். 


kadakamகடகம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உங்கள் உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப் பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்கள் வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். தைரியம் கூடும் நாள்.


simamசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


kanniகன்னி: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை நீங்கள் வாங்கி தருவீர்கள். சிலர் உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனை தருவீர்கள். சாதிக்கும் நாள்.


thulamதுலாம்: சிறுசிறு சந்தர்ப்பங் களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்தி கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். சிறப்பான நாள்.


viruchigamவிருச்சிகம்: நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர் வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


dhanusuதனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதியை மேம் படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்களை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதுமை படைக்கும் நாள்.


magaramமகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடை வார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


kumbamகும்பம்: இன்று நீங்கள் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மனஉளைச்சலை ஏற்படுத்துவார்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.


meenamமீனம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here