Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 29/01/2017

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 29/01/2017

96
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 6.30 – 7.30    
மாலை – 3.30 – 4.30  மாலை – 4.30 – 6.00  மாலை – 12.00 – 1.30

                             சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்


mesahamமேசம்: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். 


rishabamரிஷபம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். சொந்த-பந்தங்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். 


mithunamமிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள். 


kadakamகடகம்: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள். 


simamசிம்மம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வெளியூர் பயணங்
களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள். 


kanni

கன்னி: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியா பாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.


thulamதுலாம்: திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். புது வேலை அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். 


viruchigamவிருச்சிகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தரு வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


dhanusuதனுசு: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள். 


magaram

மகரம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். போராடி வெல்லும் நாள். 


kumbamகும்பம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். சாதிக்கும் நாள். 


meenamமீனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சில வேலை களை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here