Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 29/11/2015

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 29/11/2015

263
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.45 – 8.45
மாலை – 3.15 – 4.15  மாலை – 4.30 – 6.00 மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: கேட்டை


mesahamமேசம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். சாதிக்கும் நாள்.


rishabamரிஷபம்: உங்கள் குடும்பத் தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


mithunamமிதுனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் கூடுதல் வேலை பார்க்க வேண்டி வரும். பக்குவமாக செயல்படவேண்டிய நாள்.


kadakamகடகம்: திட்டமிடாத செலவை போராடி சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


simamசிம்மம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பிரியமான வர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங் களை உணருவீர்கள். சிறப்பான நாள்.


kanniகன்னி: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.


thulamதுலாம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.


viruchigamவிருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றா கவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உதவி கேட்டு சிலர் தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.


dhanusu

தனுசு: பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் முடங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.


magaramமகரம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சபை களில் முதல் மரியாதை கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.


kumbamகும்பம்: புதிய சிந்தனை கள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமை களை கண்டறிவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதுமை படைக்கும் நாள்.


meenamமீனம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங் களை நீங்கள் முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.