Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 31/01/2016

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 31/01/2016

375
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.00
மாலை – 3.30 – 4.30 மாலை – 4.30 – 6.00  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: ரேவதி


mesaham

மேசம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் நலம் சீராகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். . புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


rishabam

ரிஷபம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உறவினர், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். . வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.


mithunamமிதுனம்: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிலும் ஆர்வம் அதிகரிக்கும் நல்ல நாள்.


kadakamகடகம்: இன்று நீங்கள் கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் கடன் தர வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்கள் அதிருப்தி அடைவார்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


simam

சிம்மம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.


kanniகன்னி: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. இரவு 8.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் முன்யோசனை தேவைப்படும் நாள்.


thulamதுலாம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.


viruchigam

விருச்சிகம்: கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். வெற்றி பெறும் நாள்.


dhanusuதனுசு: இன்று பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். மற்றவர்கள் விவகாரத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


magaramமகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகளை உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். அமோகமான நாள்.


kumbamகும்பம்: எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புது வேலை அமையும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


meenamமீனம்: இன்று நீங்கள் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.