Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 03/03/2016

இன்றைய ராசிபலன் – வியாழன் 03/03/2016

328
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 11.15 – 12.00  காலை – 6.00 – 7.30
 மாலை – 12.30 – 1.30  மாலை – 1.30  3.00

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி


mesahamமேசம்: அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.


rishabamரிஷபம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


mithunamமிதுனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


kadakamகடகம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனைத் தருவீர்கள். முயற்சிகள்
பலிதமாகும் நாள்.


simamசிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம்  உண்டு. சொந்த- பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.  உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.


kanniகன்னி: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடுகளைகட்டும். பிரபலங்கள்  அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு.  உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.


thulamதுலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.  உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


viruchigamவிருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க  முயற்சி செய்வீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில்  புது சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


dhanusu

தனுசு: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள்  வெளிப்படும் நாள்.


magaram

மகரம்: இன்று உங்களுக்கு வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உதவிக் கேட்டு உறவினர், மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம்.  தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.


kumbamகும்பம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில்  உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்ககையாளர்களின்  எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். நினைத்தது நிறைவேறும் நாள்.


meenamமீனம்: இன்று உங்களுக்கு எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். நீங்கள்  சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.  உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here