Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 04/02/2016

இன்றைய ராசிபலன் – வியாழன் 04/02/2016

380
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.30 – 11.30  காலை – 6.00 – 7.30
 மாலை – 12.30 – 1.30  மாலை – 1.30  3.00

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி


mesahamமேசம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


rishabamரிஷபம்: அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர பகை வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.


mithunam

மிதுனம்: இன்று உங்களுக்கு எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


kadakamகடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


simamசிம்மம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகளால் ஆதாயம் உண்டு. நினைத்தது நிறைவேறும் நாள்.


kanniகன்னி: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். சாதிக்கும் நாள்.


thulam

துலாம்: இன்று நீங்கள் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். உத்யோகத்தில் அதிருப்தி உண்டாகும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


viruchigam

விருச்சிகம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சிறப்பான நாள்.


dhanusu

தனுசு: எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.


magaramமகரம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு.விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


kumbam

கும்பம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். மனோபலம் கூடும் நாள்.


meenamமீனம்: கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப்பொலிவுக் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.