Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 05/05/2016

இன்றைய ராசிபலன் – வியாழன் 05/05/2016

448
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.30 – 11.30  காலை – 6.00 – 7.30
 மாலை – 12.30 – 1.30  மாலை – 1.30  3.00

சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்


mesaham

மேசம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிச மாக உயரும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையைஏற்றுக் கொள்வார்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் மரியாதைக் கூடும். நினைத்ததை முடிக்கும் நாள். –


mithunam

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள். 


kadakam

கடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் செல்வாக்கு உயரும். திடீர் யோகம் கிட்டும் நாள்.


simam

சிம்மம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.


kanni

கன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். சகோதரி உதவுவார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் மறுக்கபட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


thulam

துலாம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மதிப்பார்கள், தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 


viruchigam

விருச்சிகம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள். 


dhanusuதனுசு: இன்று நீங்கள் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.


magaramமகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் மகிழ்ச்சி தங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


kumbamகும்பம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்து செல்லும். சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.


meenamமீனம்: இன்று நீங்கள் உணர்ச்சிவசபபட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். உதவிக் கேட்டு உறவினர், நண்பர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டவை தாமதமாகி முடியும் நாள்.