Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 07/01/2016

இன்றைய ராசிபலன் – வியாழன் 07/01/2016

484
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.30 – 11.30  காலை – 6.00 – 7.30
மாலை – 12.30 – 1.30  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: கார்த்திகை


mesahamமேசம்: இன்று உங்களது புதிய முயற்சிகள் தள்ளி போய் முடியும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் நெருக்கடிகள் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.


rishabamரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.


mithunamமிதுனம்: இன்று நீங்கள் திடீர் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். பழைய பகை, கடன் நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.


kadakamகடகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


simamசிம்மம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். நெருங்கியவர்களுக்காக சிலரின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.


kanniகன்னி: உங்கள் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


thulamதுலாம்: பேச்சில் உங்களின் அனுபவ அறிவு வெளிப்படும். உங்களால் பயன் அடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.


viruchigamவிருச்சிகம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். . வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். 


dhanusu

தனுசு: இன்று நீங்கள் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.


magaramமகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மனநிம்மதி கிட்டும் நாள்.


kumbamகும்பம்: எந்த பிரச்னைகளை யும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். நீங்கள் வாங்கிய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.


meenamமீனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பிரபலங்கள் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகையால் உற்சாகம் பொங்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியா பாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி பொறுப்புகளை ஒப்படைப்பார். யோகம் கிட்டும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here