இன்றைய ராசிபலன் – வியாழன் 08/09/2016

இன்றைய ராசிபலன் – வியாழன் 08/09/2016

161
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.45 – 11.45  காலை – 6.00 – 7.30
மாலை – 12.15 – 1.15  மாலை – 1.30  3.00

சந்திராஷ்டமம்: பரணி


mesahamமேசம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.


mithunam

மிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.

எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


kadakamகடகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அழகு, இளமைக் கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.


simamசிம்மம்: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


kanniகன்னி: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.


thulamதுலாம்: தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


viruchigam

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


dhanusu

தனுசு: இன்று நீங்கள் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். போராட்டமான நாள்.


magaramமகரம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போங்கள். வியாபாரத்தில் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை வேலையாட்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.


kumbamகும்பம்: இன்று நீங்கள் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


meenamமீனம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

NO COMMENTS

LEAVE A REPLY