Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 08/12/2016

இன்றைய ராசிபலன் – வியாழன் 08/12/2016

83
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.45 – 11.45    காலை – 6.00 – 7.30
மாலை – 12.15 – 1.15  மாலை – 1.30  3.00  

சந்திராஷ்டமம்: உத்திரம்


mesahamமேசம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதக மான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோ கத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.


rishabamரிஷபம்: கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். தாயாரு டன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


mithunam

மிதுனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.


kadakamகடகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப் பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.


simamசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத் தில் நிம்மதி உண்டு. வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர் களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.


kanniகன்னி: இன்று நீங்கள் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். சிறுசிறு ஏமாற்றங்கள் ஏற்படக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.


thulamதுலாம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. மனைவி வழியில் ஆதரவு பெருகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.


viruchigamவிருச்சிகம்: இன்று நீங்கள் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்- மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் டென்ஷனாவீர்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


dhanusuதனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். உடல் நலம் சீராகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.


magaram

மகரம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.


kumbamகும்பம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்வீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


meenamமீனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கை யாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகள் பலிதமாகும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.