Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 10/03/2016

இன்றைய ராசிபலன் – வியாழன் 10/03/2016

323
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.00 – 11.30  காலை – 6.00 – 7.30
 மாலை – 12.30 – 1.30  மாலை – 1.30  3.00

சந்திராஷ்டமம்: மகம், பூரம்


mesahamமேசம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடல்  நிலை சீராகும். புதியவரின் நட்பால் உற்சாமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய  அத்தியாயம் தொடங்கும் நாள்.


rishabamரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். நீண்ட நாள் பிரச்னை
யில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.


mithunamமிதுனம்: பிள்ளைகள் உங்கள் அருமையை புரிந்துக் கொள்வார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.  வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களின் கோரிக்கையை ஏற்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.


kadakam

கடகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். சொத்து  சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.


simam

சிம்மம்: இன்று நீங்கள் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்  கொடுத்து போவது நல்லது. சிலர் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் நாள்.


kanni

கன்னி: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஆன்மிகநாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எல்லோரும்  மதிப்பார்கள்.


thulam

துலாம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால்  போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் பாக்கிகளை  போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சோர்வு வந்து நீங்கும். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


dhanusuதனுசு: இன்று நீங்கள் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள்.  வியாபாரத்தில்  வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.


magaram

மகரம்: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.  உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். இனிமையான நாள்.


kumbamகும்பம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சியால் முன்னேறும் நாள். 


meenamமீனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். திடீர் பணவரவு உண்டு. புது முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று  நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புதிய பாதை தெரியும்  நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here