Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 10/12/2015

இன்றைய ராசிபலன் – வியாழன் 10/12/2015

308
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.45 – 11.45  காலை – 6.00 – 7.30
மாலை – 12.15 – 1.15  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: பரணி


mesahamமேசம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். பணவரவு திருப்தி தரும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த சலுகைகளை பெறுவீர்கள். தேவையற்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். நிம்மதி கிட்டும் நாள்.


mithunamமிதுனம்: இன்று நீங்கள் கிடைத்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவீர்கள். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.

 


kadakamகடகம்: உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


simamசிம்மம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.


kanniகன்னி: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதரங்கள் மதிப்பார்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.


thulamதுலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தொட்டது துலங்கும் நாள்.


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் கவனமாக பழகுங்கள். தேவையற்ற பேச்சினை குறைப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


dhanusu

தனுசு: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.


magaramமகரம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாச மழை பொழிவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் ஆதரிப்பார்கள். மதிப்புக் கூடும் நாள்.


kumbamகும்பம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். யோகா, தியானம் போன்றவற்றில் மனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகமாகும். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

 


meenamமீனம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.