Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 16/06/2016

இன்றைய ராசிபலன் – வியாழன் 16/06/2016

448
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.30 – 11.30  காலை – 6.00 – 7.30
 மாலை – 12.30 – 1.30  மாலை – 1.30  3.00

சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி


mesahamமேசம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.


rishabamரிஷபம்: இன்றையதினம் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.


mithunamமிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.


kadakamகடகம்: அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். உடல் நிலை பாதிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


simamசிம்மம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். சகோதரங்களால் பயனடைவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


kanniகன்னி: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


thulamதுலாம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்களைக் கூட போராடி முடிக்க வேண்டி வரும். எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


viruchigamவிருச்சிகம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். முயற்சியால் முன்னேறும் நாள். 


dhanusuதனுசு: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


magaramமகரம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.


kumbamகும்பம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தொட்ட காரியம் துலங்கும் நாள்.


meenamமீனம்: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.