Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 17/03/2016

இன்றைய ராசிபலன் – வியாழன் 17/03/2016

328
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.30 – 11.30  காலை – 6.00 – 7.30
 மாலை – 12.30 – 1.30  மாலை – 1.30  3.00

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை


mesahamமேசம்: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். சவால்களில் வெற்றி கிட்டும் நாள்.


rishabamரிஷபம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். கனவு நனவாகும் நாள்.


mithunam

மிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.


kadakamகடகம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


simam

சிம்மம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


kanni

கன்னி: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.


thulamதுலாம்: இன்று நீங்கள் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.


viruchigamவிருச்சிகம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


dhanusuதனுசு: இன்றைய தினம் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


magaramமகரம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முன்கோபம் குறையும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.


kumbam

கும்பம்: இன்று நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்து போட்டு பார்க்க வேண்டி வரும். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னைகள் வந்து போகும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


meenam

மீனம்: புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகைப் பிறக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். சிறப்பான நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here