Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 18/02/2016

இன்றைய ராசிபலன் – வியாழன் 18/02/2016

392
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.30 – 11.30  காலை – 6.00 – 7.30
 மாலை – 12.00 – 1.00  மாலை – 1.30  3.00

சந்திராஷ்டமம்: அனுஷம்


mesahamமேசம்: தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புது வாகனம் வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.


rishabamரிஷபம்: கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள். 


mithunamமிதுனம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நன்மை கிட்டும் நாள்.


kadakamகடகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கனவு நனவாகும் நாள்.


simamசிம்மம்: இன்று நீங்கள் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்


kanni

கன்னி: எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.


thulam

துலாம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். சகோதர வகையில் சச்சரவு வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். எதிலும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைகட்டும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


dhanusuதனுசு: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.


magaramமகரம்: இன்று நீங்கள் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக்கொண்டிருக்காதீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் ஈகோ அதிரிக்கும். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.


kumbamகும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வர வேண்டி பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.


meenam

மீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. ஓய்வு தேவைப்படும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here