Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 21/01/2016

இன்றைய ராசிபலன் – வியாழன் 21/01/2016

390
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.30 – 11.30  காலை – 6.00 – 7.30
மாலை – 12.30 – 1.30  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: விசாகம், அனுசம்


mesahamமேசம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


rishabamரிஷபம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


mithunamமிதுனம்: உங்கள் குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை  நீங்கள் மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர் களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.வியாபாரத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோ கத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். கனவு நனவாகும் நாள்.


kadakamகடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும்.  வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


simamசிம்மம்: இன்று உங்களுக்கு இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


kanniகன்னி: தன் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.


thulam

துலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

 


viruchigam

விருச்சிகம்: குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போவது நல்லது. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.


dhanusuதனுசு: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


magaramமகரம்: எதிலும் வெற்றி பெறு வோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களால் முன்பு பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். முயற்சி கள் பலிதமாகும் நாள்.


kumbamகும்பம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


meenamமீனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here