Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 21/04/2016

இன்றைய ராசிபலன் – வியாழன் 21/04/2016

551
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.30 – 11.30  காலை – 6.00 – 7.30
 மாலை – 12.30 – 1.30  மாலை – 1.30  3.00

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி


mesaham

மேசம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஆதாய மடைவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகை கள் கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


rishabam

ரிஷபம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


mithunam

மிதுனம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். . வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். இனிமையான நாள்.


kadakam

கடகம்: குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


simam

சிம்மம்: இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் தர்மசங்கடமான சூழல்களுக்கு ஆளாவீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


kanni

கன்னி: இன்று உங்களுக்கு பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


thulam

துலாம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். மனைவிவழியில் மதிப்புக் கூடும். அழகு, இளமைக்கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


viruchigam

விருச்சிகம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நினைத்ததை முடிக்கும் நாள்.


dhanusu

தனுசு: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.


magaram

மகரம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். பிள்ளை களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.


kumbam

கும்பம்: வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.


meenam

மீனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here