Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 23/06/2016

இன்றைய ராசிபலன் – வியாழன் 23/06/2016

382
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.30 – 11.30  காலை – 6.00 – 7.30
 மாலை – 12.30 – 1.30  மாலை – 1.30  3.00

சந்திராஷ்டமம்: புனர்பூசம்


mesahamமேசம்: இன்று நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.


mithunamமிதுனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.


kadakamகடகம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள்.


simam

சிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்து செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


kanniகன்னி: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் மதிப்புக் கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். போராடி வெல்லும் நாள்.


thulamதுலாம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம்  பிறக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள். 


viruchigamவிருச்சிகம்: இன்று நீங்கள் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். 


dhanusuதனுசு: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.


magaramமகரம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.


kumbam

கும்பம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்துப் போகும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


meenamமீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.