Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 24/12/2015

இன்றைய ராசிபலன் – வியாழன் 24/12/2015

252
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.45 – 11.45  காலை – 6.00 – 7.30
மாலை – 12.15 – 1.15  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்


mesahamமேசம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.


rishabamரிஷபம்: யாவரிடமும் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். மற்றவர்களுக்காக நியாயம் பேசப் போய் வம்பில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டிவரும். உத்யோகத்தில் உங்கள் திறமையை அதிகாரிகள் குறைத்து மதிப்பிடுவார்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.


mithunamமிதுனம்: எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


kadakamகடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களுடனான மோதல்கள் விலகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிறைவு கிட்டும் நாள்.


simamசிம்மம்: கணவன், மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். நன்மைகள் நடக்கும் நல்ல நாள்.


kanniகன்னி: இன்று உங்களுக்கு மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தில் எதிர் பாராத செலவுகள் வந்து போகும். தாழ்வுமனப்பான்மை வந்து விலகும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். ஓய்வு தேவைப்படும் நாள்.


thulamதுலாம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எந்த செயலிலும் கவனம் தேவைப்படும் நாள்.


viruchigamவிருச்சிகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.


dhanusuதனுசு: பேச்சில் கம்பீரம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சவாலில் வெற்றி கிட்டும் நாள்.


magaramமகரம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.


kumbamகும்பம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் உண்டு. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


meenamமீனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். உங்களால் பயனடைந்தவர் கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். இனிமையான நாள்.