Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 25/02/2016

இன்றைய ராசிபலன் – வியாழன் 25/02/2016

298
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.30 – 11.30  காலை – 6.00 – 7.30
 மாலை – 12.30 – 1.30  மாலை – 1.30  3.00

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்


mesahamமேசம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அமோகமான நாள்.


rishabamரிஷபம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மதிப்புக் கூடும் நாள். 


mithunamமிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சகோதர வகையில் விவாதங்கள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தேவையில்லத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.


kadakamகடகம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


simamசிம்மம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பரபரப்புடன் செயல்படுவீர்கள். சிறப்பான நாள்.


kanniகன்னி: இன்று நீங்கள் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள்.  திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


thulamதுலாம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். . புது நட்பு மலரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். பேச்சினை குறைத்து செயலில் ஈடுபடுவது நல்லது. எதிலும் முன்எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


viruchigam

விருச்சிகம்: இன்று நீங்கள் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் சற்று தாமதமாகும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்படுவதால் வெற்றி பெறும் நாள்.


dhanusu

தனுசு: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.


magaram

மகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும். நினைத்ததை முடிக்கும் நாள்.


kumbam

கும்பம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். சகோதரி உதவுவார். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


meenam

மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.