Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 26/05/2016

இன்றைய ராசிபலன் – வியாழன் 26/05/2016

349
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 11.30 – 12.00  காலை – 6.00 – 7.30
 மாலை – 12.30 – 1.00  மாலை – 1.30  3.00

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்


mesahamமேசம்: இன்று நீங்கள் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சொந்த-பந்தங்களால் அன்புத்தொல்லைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


rishabamரிஷபம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.


mithunamமிதுனம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவு பூர்வமாகப் செயல்படுவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.


kadakamகடகம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பழைய கடன் பிரச்னை அவ்வப் போது மனசை வாட்டும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


simamசிம்மம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


kanniகன்னி: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.  செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். பிரச்னைகள் வெகுவாக குறையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.


thulam

துலாம்: இன்று உங்களுக்கு இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் நாள்.


viruchigamவிருச்சிகம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். மாறுபட்ட அணுகுமறையால் சாதிக்கும் நாள்.


dhanusu

தனுசு: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


magaramமகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தொட்டது துலங்கும் நாள்.


kumbamகும்பம்: பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு பெருகும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


meenamமீனம்: கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.