Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 28/01/2016

இன்றைய ராசிபலன் – வியாழன் 28/01/2016

490
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 12.30 – 1.30  காலை – 6.00 – 7.30
 மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: சதயம்


mesaham

மேசம்: இன்று நீங்கள் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். யாரையும் நம்ப வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளால் பிரச்னைகள் வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


rishabam

ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


mithunamமிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்
கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.


kadakamகடகம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.


simamசிம்மம்: இன்று உங்களுக்கு இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


kanni

கன்னி: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


thulam

துலாம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


viruchigam

விருச்சிகம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதிக்கும் நாள். 


dhanusu

தனுசு: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

 


magaram

மகரம்: இன்று நீங்கள் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப் படுவீர்கள். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

 


kumbam

கும்பம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


meenamமீனம்: சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.