Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 3/12/2015

இன்றைய ராசிபலன் – வியாழன் 3/12/2015

264
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.45 – 11.45  காலை – 6.00 – 7.30
மாலை – 12.15 – 1.15  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: திருவோணம்


mesahamமேசம்: இன்று நீங்கள் திட்டமிட்ட காரியங்களை அலைந்து, முடிக்க வேண்டி வரும். உங்கள் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நல்ல நாள்.


rishabamரிஷபம்: இன்று உங்களுக்கு சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். இடம், பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.


mithunamமிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். தொட்டது துலங்கும் நல்ல நாள்.


kadakamகடகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பிராத்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நல்ல நாள்.


simamசிம்மம்: தைரியமாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வெற்றிக்கு வித்திடும் நல்ல நாள்.


kanniகன்னி: கடந்தகால சுகமான அனுபவங்களை, சாதனைகளை நினைத்து மகிழ்வீர்கள். உங்களின் பழைய கடனை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நல்ல நாள்.


thulamதுலாம்: தேவையற்ற வீண் குழப்பம் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழயர்களால் இருந்த பிரச்னைகள் தீரும். மனசாட்சி படி செயல்படும் நல்ல நாள்.


viruchigamவிருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் நீங்கள் ஈடுபடுவீர். சகோதரர்கள் சாதகமாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தோர் இப்போது உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். புகழ், கௌரவம் கூடும் நல்ல நாள்.


dhanusu

தனுசு: இன்று நீங்கள் யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசுவார்கள். வியாபாரத்தில் உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நல்ல நாள்.


magaramமகரம்: உங்கள் செயலில் வேகம் கூடும். ஆன்மிக நாட்டம் அதி கரிக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலனாகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நல்ல நாள்.


kumbamகும்பம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. திருமண பேச்சு சுமூகமாக முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நல்ல நாள்.


meenamமீனம்: புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நேர்மையாக இருந்தால் நன்மை வந்து சேரும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். அரசு சார்ந்த வேலைகள் பெற உகந்த சூழ்நிலை உருவாகும். தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். வராத பணம் வந்து சேரும் நல்ல நாள்.