Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 31/12/2015

இன்றைய ராசிபலன் – வியாழன் 31/12/2015

204
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.45 – 11.45  காலை – 6.00 – 7.30
மாலை – 12.15 – 1.15  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்


mesahamமேசம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.


rishabamரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உடல் நிலை சீராகும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் இருந்த பிரச்னைகள் தீரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


mithunamமிதுனம்: தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி இலக்கை எட்டும் நாள்.


kadakamகடகம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


simamசிம்மம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


kanniகன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். நினைத்தது நிறைவேறும் நாள்.


thulamதுலாம்: இன்று உங்களுக்கு பல வேலைகள் தடைப்பட்டு முடியும். சின்ன சின்ன பிரச்னைகள் குடும்பத்தில் தலைத்தூக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


viruchigamவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.


dhanusu

தனுசு: இன்று நீங்கள் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.


magaram

மகரம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். புகழ், கௌரவம் கூடும் நாள்.


kumbamகும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். விருந்தினர்கள் வருகை உண்டு. பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


meenamமீனம்: இன்று நீங்கள் அவ்வப்போது கோபப்படுவீர்கள். உங்கள் குடும்பத்தினர் குறித்து வெளி நபர்களிடம் குறை கூற வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாக பேசி வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here