Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 5/11/2015

இன்றைய ராசிபலன் – வியாழன் 5/11/2015

190

நல்ல நேரம்:
காலை – 10.45-11.45
மாலை – 12.00-1.00
இராகு காலம்:
காலை – 1.30-3.00
மாலை – 10.30-12.00
எமகண்டம்:
காலை – 6.00-7.30
மாலை – 10.30-12.00
குளிகை:
காலை – 9.00-10.30
மாலை – 1.30-3.00
சந்திராஷ்டமம்: உத்திராடம்


mesahamமேசம்: குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிறிய காரியங்கள் கூட பன்மடங்கு நன்மை தரும். உயர்ந்த சிந்தனை உருவாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிட்டும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எந்த செயலையும் பதறாமல் செய்தால் நன்மை உண்டாகும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை


rishabam

ரிஷபம்: புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நேர்மையாக இருந்தால் நன்மை வந்து சேரும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். அரசு சார்ந்த வேலைகள் பெற உகந்த சூழ்நிலை உருவாகும். தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். வராத பணம் வந்து சேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, ஊதா


mithunam

மிதுனம்: நல்ல சிந்தனைகளால் நன்மைகள் நடக்கும். கணவன், மனைவிக்குள் சந்தேகம் நீங்கி மகிழ்ச்சி பெருவீர்கள். பெரியோர்களிடம் பணிவுடன் நடந்துகொண்டு அவர்களது ஆசியினை பெருவீர்கள். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் பிரச்சனை வந்து போகும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். மகிழ்ச்சி பொங்கும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்


kadakam

கடகம்: தேவையற்ற பேச்சால் தீங்கு வந்து சேரும். மற்றவர்கள் விடயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலை விசயமாக வெளியூர் பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நன்மை கிட்டும். தொழிலில் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் செலவுகள் அதிகரிக்கும். செலவுகளை சமாளிக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பிங்க்


simam

சிம்மம்: அதிக அலைச்சல் இல்லாமல் ஓய்வு எடுப்பது நல்லது நல்லது. பயணச் செலவு ஏற்படும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதியை தரும். வியாபாரத்தில் பணவரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்திற்குள் வீண் சந்தேகங்களை தவிர்க்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, கிரே


kanni

கன்னி: மனதை ஒரு முகப்படுத்துவதால் செயல் நல்ல விதமாக நிறைவேறும். பொறாமை பொட்டி அதிகரிக்கும். முயன்றால் வெற்றி பெருவீர்கள். திடீர் செலவுகள் ஏற்படும். குடும்ப காரியங்கள் பற்றி பிறரிடம் சொல்ல வெண்டாம். தொழில் மந்தமாக அமையும். முயற்சி செய்தால் நன்மை கிட்டும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பிங்க்


thulam

துலாம்: குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உங்களை யாரும் புரிந்துக் கொள்ளவில்லை என நினைப்பீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சோதனை நாளாக அமையும். உத்யோகத்தில் உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகலாம். வியாபாரத்தில் சிக்கல்கள் உருவாகும். சோதனையால் சோர்வு ஏற்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம்: ப்ரவுன், மஞ்சள்


viruchigam

விருச்சிகம்: மனக் கவலை வர வாய்ப்பு உள்ளது. நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மனதில் ஒருவித அச்சம் உருவாகும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். உத்யோகத்தில் சகஊழியர்களிடம் அதிகம் பேச வேண்டாம். தொழிலில் மந்தநிலை உருவாகும். பயம் இல்லாமல் இருந்தால் நன்மை ஏற்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: வைலட், ரோஸ்


dhanusu

தனுசு: பகைவர்களால் இருந்த தொல்லை இடம் தெரியாமல் விலகும். உடன்பிறந்தொர் வகையில் நன்மை உண்டு. எடுத்த காரியங்களை எதிர்ப்புகள் வந்தாலும் எளிதாக முடிப்பீர்கள். முடிந்த அளவில் இறைப்பணி செய்து மகிழ்வீர்கள். உத்யோகதில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரம் வளர்ச்சி பெரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, இளம் மஞ்சள்


magaram

மகரம்: நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். அறிவு, தகுதியை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்சி திருவினையாகும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம்


kumbam

கும்பம்: நீண்ட நாள் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். மனதில் புத்துணர்வு பொங்கும். அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை பணியமர்துவீர்கள். எடுத்த காரியங்களை ஆதாயத்துடன் முடிக்கும் நல்ல நாள்

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: ப்ரவுன், கிரே


meenam

மீனம்: தெய்வ வழிபாட்டால் நன்மை வந்து சேரும். இன்று உங்கள் நிகழ்கால தேவைகள் நிறைவேறும். வழக்கு, பிரச்சனைகளில் நல்ல தீர்ப்பு வந்து சேரும். உத்யோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வராது. தொழில் முன்னேற்றத்திற்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். புகழ் வந்து சேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம்: மெரூன், ஆரஞ்சு