Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 01/03/2016

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 01/03/2016

356
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி


mesahamமேசம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படு வீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.


rishabam

ரிஷபம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வருமானம் திருப்தி தரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும்நாள்.


mithunam

மிதுனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும்.  பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் முக்கிய அறிவரைத்  தருவார்கள். இனிமையான நாள்.


kadakamகடகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள்.  புது எண்ணங்கள் தோன்றும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.


simamசிம்மம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து ஒருபடி உயரும். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில்  புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதிக்கும் நாள்.


kanni

கன்னி: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். உத்யோகத்தில் பொறுப்புகள்  அதிகரிக்கும். தேவையில்லாத்ய செயல்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் பொறுமைத் தேவைப்படும் நாள்.


thulamதுலாம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமானாலும், எதிர்பாராத சில வேலைகள் முடிவடையும். வீடு, வாகனப் பராமரிப்புச்  செலவுகள் அதிகமாகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னைகள் தீரும். எதிர்பாராத உதவி  கிட்டும் நாள்.


viruchigamவிருச்சிகம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள் பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.  எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள்.  அமோகமான நாள்.


dhanusu

தனுசு: இன்று நீங்கள் முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை  உணர்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.


magaram

மகரம்: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. உத்யோகத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


kumbamகும்பம்: குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.  உத்யோகத்தில் உயரதிகாரிகள் உதவுவார்கள். மதியம் மூன்று மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.


meenamமீனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.  அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.