Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 02/02/2016

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 02/02/2016

438
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: அசுபதி, பரணி


mesaham

மேசம்: இன்று நீங்கள் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.


rishabamரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மனசாட்சி படி செயல்படும் நாள்.


mithunamமிதுனம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.


kadakam

கடகம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியை கலந்தாலோசித்து முடிவுவெடுக்கப்பாருங்கள். போராடி வெல்லும் நாள்.


simamசிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி பொறுப்பு
களை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.


kanni

கன்னி: இன்று உங்ளுக்கு உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும்.  வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


thulam

துலாம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அழகு, இளமைக் கூடும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.


viruchigamவிருச்சிகம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.


dhanusuதனுசு: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


magaramமகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.


kumbamகும்பம்: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வுகள் அதிகமாகும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


meenamமீனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.