Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 05/04/2016

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 05/04/2016

272
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: கார்த்திகை


mesahamமேசம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். திடீர் யோகம் கிட்டும் நாள்.


rishabamரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


mithunamமிதுனம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். சகோதரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


kadakamகடகம்: இன்று நீங்கள் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். வியாபாரத்தில் கடன் தர வேண்டாம். உத்யோகத்தில் தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. சிக்கனம் தேவைப்படும் நாள்.


simamசிம்மம்: பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் நீங்களே இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். போராட்டமான நாள்.


kanni

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன் – மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.


thulam

துலாம்: இன்று நீங்கள் சில வேலைகளை உங்கள் மேற் பார்வையில் முடிப்பது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்துக் காட்டுவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.


dhanusuதனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.


magaramமகரம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவமும் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


kumbam

கும்பம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். திறமைகள் வெளிப்படும் நாள்.


meenamமீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here