இன்றைய ராசிபலன் – செவ்வாய் 05/07/2016

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 05/07/2016

381
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.45 – 11.45  காலை – 9.00 – 10.30
மாலை – 4.45 – 5.45  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்


mesahamமேசம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.


rishabam

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.


mithunam

மிதுனம்: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும்.

முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப்பிடிப்பது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


kadakamகடகம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


simamசிம்மம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.


kanniகன்னி: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


thulam

துலாம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


viruchigamவிருச்சிகம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சிறப்பான நாள்.


dhanusu

தனுசு: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டாம். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


magaramமகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


kumbamகும்பம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். நிம்மதியான நாள்.


meenamமீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

NO COMMENTS

LEAVE A REPLY