Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 10/05/2016

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 10/05/2016

425
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: கேட்டை


mesaham

மேசம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும் நாள்.


rishabamரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.


mithunam

மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். 


kadakam

கடகம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.


simam

சிம்மம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.


kanni

கன்னி: இன்று நீங்கள் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில்  எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.


thulam

துலாம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வந்து நீங்கும். எதிலும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். 


viruchigam

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


dhanusuதனுசு: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.


magaramமகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.


kumbam

கும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத் தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனசாட்சிபடி செயல்படும் நாள்.


meenam

மீனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.