Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 12/04/2016

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 12/04/2016

324
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்


mesaham

மேசம்: இன்று நீங்கள் ஒரே முயற்சி யில் முடிக்க வேண்டிய விஷயத்தை பல முறை அலைந்து முடிப்பீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


rishabam

ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.


mithunam

மிதுனம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.


kadakam

கடகம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். விலையுயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


simamசிம்மம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


kanni

கன்னி: இன்று உங்களுக்கு நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.


thulam

துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


viruchigam

விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.


dhanusu

தனுசு: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். புகழ், கௌரவம் உயரும் நாள்.


magaram

மகரம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவர். மற்ற வருக்காக சில பொறுப்பை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


kumbam

கும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நட்பு வட்டம் விரியும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


meenam

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.