இன்றைய ராசிபலன் – செவ்வாய் 12/07/2016

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 12/07/2016

447
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.45 – 8.45  காலை – 9.00 – 10.30
மாலை – 4.45 – 5.45  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: பூரட்டாதி


mesaham

மேசம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும்.வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.


rishabam

ரிஷபம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


mithunamமிதுனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.

மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


kadakamகடகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உடல் நலம் சீராகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


simamசிம்மம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.


kanni

கன்னி: இங்கிதமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.


thulamதுலாம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டிவரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


viruchigamவிருச்சிகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் இதமாகப் பேசி வேலை வாங்குவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


dhanusuதனுசு: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


magaramமகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள்.


kumbamகும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


meenamமீனம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். 

NO COMMENTS

LEAVE A REPLY