Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 15/03/2016

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 15/03/2016

352
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்


mesahamமேசம்: இன்று உங்களுக்கு வீண் டென்ஷன் வந்துச் செல்லும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வராது என்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள்-. வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தின
ருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.


mithunamமிதுனம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளை அரவணைத்துப் போங்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


kadakamகடகம்: இன்று உங்களுக்கு மன உளைச்சல் வந்துச் செல்லும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனநிறைவு கிட்டும் நாள்.


simamசிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


kanniகன்னி: முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


thulamதுலாம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவிவழியில் மதிக்கப்
படுவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


viruchigamவிருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


dhanusuதனுசு: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நினைத்ததை முடிக்கும் நாள்.


magaramமகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிறப்பான நாள்.


kumbamகும்பம்: கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர் களாவார்கள். மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.


meenamமீனம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சாதிக்கும் நாள்.