Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 15/12/2015

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 15/12/2015

275
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.45 – 11.45  காலை – 9.00 – 10.30
மாலை – 4.45 – 5.45  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: புனர்பூசம்


mesahamமேசம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை நீங்கள் இப்பொழுது சந்திக்க நேரிடும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.


rishabamரிஷபம்: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரையும் நீங்கள் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளை எதிர்த்து பேச வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


mithunamமிதுனம்: இன்று நீங்கள் சாதாரணமாக பேசப் போய் சண்டையில் முடியும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

 


kadakam

கடகம்: இன்று உங்களுக்கு மனஉளைச்சல் வந்து செல்லும். பிற்பகல் முதல் டென்ஷன், கோபம் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நிம்மதி கிட்டும் நாள்.


simam

சிம்மம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.


kanniகன்னி: எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். உங்கள் தாயாருக்கு வீண் டென்ஷன் வரக்கூடும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை நீங்கள் உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


thulamதுலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


viruchigamவிருச்சிகம்: இன்று சாணக்கியத்தனமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.


dhanusu

தனுசு: இன்று உங்கள் பலம் பலவீனத்தை உணருவீர்கள். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். தாய்வழியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


magaramமகரம்: இன்று வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.


kumbamகும்பம்: இன்று உங்களுக்கு டென்ஷன் வந்து போகும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.


meenamமீனம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக பேசுவீர்கள், செயல் படுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.