இன்றைய ராசிபலன் – செவ்வாய் 16/08/2016

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 16/08/2016

224
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.45 – 8.45  காலை – 9.00 – 10.30
மாலை – 4.45 – 5.45  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: மிருகசீருசம், திருவாதிரை


mesaham

மேசம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


rishabam

ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் விவாதம் வந்துப் போகும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.


mithunamமிதுனம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்.

பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.


kadakam

கடகம்: பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். மகிழ்ச்சி தொடங்கும் நாள்.


simam

சிம்மம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.


kanniகன்னி: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள்.

உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். புகழ், கௌரவம் உயரும் நாள்.


thulamதுலாம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். புதிய யோசனைகள் பிறக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


viruchigam

விருச்சிகம்: நட்பு வட்டம் விரியும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


dhanusuதனுசு: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.


magaramமகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.


kumbam

கும்பம்: வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்யோகத்தில் சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். போராடி வெல்லும் நாள்.


meenamமீனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள். 

NO COMMENTS

LEAVE A REPLY