Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 19/01/2016

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 19/01/2016

354
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி


mesaham

மேசம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். முகப்பொலிவு கூடும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


rishabamரிஷபம்: எதிர்பார்த்த வைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.


mithunamமிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சிறப்பான நாள்.


kadakamகடகம்: குடும்பத்தினர் உங்கள்ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியாக சில திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அமோகமான நாள்.


simamசிம்மம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.


kanni

கன்னி: இன்று உங்களுக்கு மன இறுக்கங்கள் உருவாகும். சிலரின் தவறுகளை சுட்டி காட்டுவதன் மூலம் சச்சரவு களில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் உயரதி காரி உங்களை புரிந்து கொள்ள மாட்டார். எதிர்பார்ப்பு தாமதமாகி முடியும் நாள்.


thulam

துலாம்: அநாவசிய செலவு களை குறைக்க பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


viruchigam

விருச்சிகம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். உத்யோகத்தில் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். இனிமையான நாள்.


dhanusu

தனுசு: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர், நண்பர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.


magaram

மகரம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். நேர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.


kumbam

கும்பம்: இன்று நீங்கள் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும்,செலவு அதிகரிக்கும். உங்களுக்கு சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். போராட்டமான நாள்.


meenamமீனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here