Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 19/04/2016

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 19/04/2016

265
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்


mesahamமேசம்: இன்று நீங்கள் பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர்களில் ஒருசிலர் நன்றி மறந்து பேசுவார்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தில் உங் கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்கள் ஆதரவாக இருப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


mithunamமிதுனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர் களால் ஆதாயமும் உண்டு. விலை உயர் ந்த ஆபரணங்கள் வாங்குவீர் கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத் தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாரா ட்டுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


kadakamகடகம்: கணவன்-மனைவிக்குள் வீண் விவாதங்கள் வந்துப் போகும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


simam

சிம்மம்: சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். சின்ன சின்ன பிரச்னைகள் குடும்பத்தில் தலைத்தூக்கும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.


kanni

கன்னி: இன்று உங்களுக்கு நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.


thulamதுலாம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புது நட்பு மலரும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


viruchigamவிருச்சிகம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரி கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


dhanusuதனுசு: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.


magaramமகரம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண் டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.


kumbamகும்பம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.


meenamமீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here