Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 21/06/2016

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 21/06/2016

545
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.30 – 11.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: மிருகசீருஷம்


mesahamமேசம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை  ஒப்படைப்பார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள்  பலிதமாகும் நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.


mithunamமிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். நினைத்தது நிறைவேறும் நாள்.


kadakamகடகம்: நண்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


simamசிம்மம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள்.


kanni

கன்னி: பல வேலைகள் தடைப்பட்டு முடியும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். எதிர்பாராத திடீர் பயணங்களும், செலவுகளும் வந்துச் செல்லும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


thulam

துலாம்: இன்று உங்களுக்கு எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


viruchigamவிருச்சிகம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கோரிக்கையை உயரதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.


dhanusuதனுசு: இன்று நீங்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.


magaram

மகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.


kumbamகும்பம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை கைக்கூடி வரும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டு பேசுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


meenamமீனம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.