Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 22/12/2015

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 22/12/2015

236
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.45 – 8.45  காலை – 9.00 – 10.30
மாலை – 4.45 – 5.45  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை


mesahamமேசம்: உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். மனதில் உயர்வான எண்ணங்கள் வரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக் கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின் கடின உழைப்பால் அதிகாரியின் மனதில் இடம் பிடிப்பீர்கள். அமோகமான நாள்.


mithunamமிதுனம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை  சாதகமாக முடியும். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


kadakam

கடகம்: இன்று நீங்கள் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.


simam

சிம்மம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்களை முடிப்பீர்கள். தாயார் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


kanniகன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.


thulamதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் – மனைவிக்குள் இருந்த பிணக்கு நீங்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனநிம்மதி கிட்டும் நல்ல நாள்.


viruchigamவிருச்சிகம்: உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாக திறமை வெளிப்படும். மதிப்பு கூடும் நாள்.


dhanusu

தனுசு: குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.


magaramமகரம்: புது திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.


kumbamகும்பம்: இன்று நீங்கள் அவ்வப்போது கோபப்படுவீர்கள். உங்கள் குடும்பத்தினர் குறித்து வெளி நபர்களிடம் குறை கூற வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாக பேசி வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.


meenamமீனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகள் கோபப்படுவார்கள். திட்டமிடாத செலவுகளை நீங்கள் போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here