Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 23/02/2016

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 23/02/2016

358
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 1.30 – 2.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: திருவோணம்


mesahamமேசம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.


rishabamரிஷபம்: இன்று நீங்கள் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். குடும்பத்தில் யாரும் உங்களை மதிக்கவில்லையென்று நினைத்துக் கொள்வீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். . உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.


mithunamமிதுனம்: எதிர்காலம் பற்றிய கவலைகளும், மறைமுக விமர்சனங்களும் வந்து நீங்கும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


kadakamகடகம்: கடினமான வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


simamசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். உடல் நலம் சீராகும். புதியவரின் நட்பால் தாயமடைவீர்கள்.வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நேர்மறை எண்ணம் பிறக்கம். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மகிழ்ச்சி தங்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


kanniகன்னி: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


thulamதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


viruchigamவிருச்சிகம்: மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.


dhanusuதனுசு: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.


magaramமகரம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


kumbamகும்பம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றி பெறும் நாள்.


meenamமீனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.  அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here