Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 24/11/2015

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 24/11/2015

296
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை
காலை – 10.45 – 11.45  காலை – 9.00 – 10.30
மாலை – 4.45 – 5.45  மாலை 3.00 – 4.30  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: ஹஸ்தம்


mesahamமேசம்: பகைவர்களால் இருந்த தொல்லை இடம் தெரியாமல் விலகும். உடன்பிறந்தொர் வகையில் நன்மை உண்டு. எடுத்த காரியங்களை எதிர்ப்புகள் வந்தாலும் எளிதாக முடிப்பீர்கள். முடிந்த அளவில் இறைப்பணி செய்து மகிழ்வீர்கள். உத்யோகதில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரம் வளர்ச்சி பெரும் நல்ல நாள்.


rishabam

ரிஷபம்: குடும்ப விவகாரங்களை வெளிநபர்களிடம் விவாதிக்க வேண்டாம். உங்களை யாரும் புரிந்துகொள்ளவில்லை என நினைப்பீர்கள். பிடிக்காத உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. செலவுகள் அதிகமாகும். உத்யோகத்தில் மரியாதை குறைவான நிகழ்வுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் தடை ஏற்படும். சிக்கனம் தேவைப்படும் நாள்.


mithunam

மிதுனம்: குடும்பத்தில் வரவுக்கேற்ற செலவு இருக்கும். பணவரவு கிடைக்க வாய்ப்புண்டு. நல்லவர்கள் தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் சூல்நிலை உருவாகும். நல்லோரின் ஆலோசனை பெறுவதால் மனதில் தன்னம்பிக்கை வளரும் நல்ல நாள்.


kadakam

கடகம்: தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. மனக் கவலை வர வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் நிதானத்துடன் செயல்படுங்கள். மனதில் ஒருவித அச்சம் உருவாகும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். தொழிலில் மந்தநிலை உருவாகும். பயம் இல்லாமல் இருந்தால் நன்மை ஏற்படும் நாள்.


simam

சிம்மம்: தெய்வ வழிபாடு மன அமைதியை தரும். அதிக அலைச்சல் இல்லாமல் ஓய்வு எடுப்பது நல்லது. பயணச் செலவு ஏற்படும். தியானம், உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பணவரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்திற்குள் வீண் சந்தேகங்களை தவிர்க்க வேண்டிய நாள்.


kanni

கன்னி: முக்கிய விடயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். உங்கள் நிறை, குறைகளை குடும்பத்தார் எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தரவேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை காப்பது நல்லது. எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.


thulam

துலாம்: மனதில் புத்துணர்வு பொங்கும். நீண்ட நாள் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். எல்லோரிடமும் ஆதயத்துடன் பழகுவீர்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை பணியமர்துவீர்கள். எடுத்த காரியங்களை ஆதாயத்துடன் முடிக்கும் நல்ல நாள்.


viruchigam

விருச்சிகம்: சங்கடங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இன்று நீங்கள் எல்லோரும் பாராட்டும்படி நற்செயல் புரிவீர்கள். கணவன் மனைவிக்குல் இன்பம் பெருக்கெடுத்து ஓடும். குடும்பம், உறவினர்களிடம் உங்கள் மதிப்பு கூடும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். மகிழ்ச்சியான நாள்.


dhanusu

தனுசு: இன்று நீங்கள் துணிவுடன் செயல்படுவீர்கள். அறிவு, திறமையை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்சி திருவினையாகும் நல்ல நாள்.


magaram

மகரம்: வராது என்று நினைத பணம் வந்து சேரும். குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிறிய காரியம் கூட பலமடங்கு நன்மை தரும்.மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னெற்றம் ஏற்படும். பாராட்டு மழையில் நனையும் நல்ல நாள்.


kumbam

கும்பம்: கல்யாண பேச்சுவார்த்தை தடையுடன் முடிவாகும். வேலைகள் செய்து முடிக்க தாமதம் ஏற்படும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். உறவினர்கள், நண்பர்களிடம் உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போங்கள். தொழிலில் சில தடைகள் ஏற்படலாம். சாமர்த்தியம் தேவைப்படும் நல்ல நாள்.


meenam

மீனம்: பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். வேலையில் புதிய திருப்பம் உண்டாகும். வியாபாரதில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.