Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 26/01/2016

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 26/01/2016

349
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்


mesahamமேசம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிகார பதவியில் இருப்பவர் அறிமுகமாவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


rishabamரிஷபம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் தனிநபர் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் உடல் நலத்தில் கவனம் தேவை. சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.


mithunamமிதுனம்: நீங்கள் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக் கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


kadakamகடகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


simamசிம்மம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய வர்கள் நண்பர்களாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


kanniகன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத் தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.


thulamதுலாம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


viruchigamவிருச்சிகம்: எதையும் உற்சாகமாக முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். மற்றவர்களுக்காக செலவு செய்து பெருமைப்படுவீர்கள். காணாமல் போன ஆவணம் கிட்டும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.


dhanusuதனுசு: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம்வரும். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.


magaramமகரம்: இன்று நீங்கள் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


kumbamகும்பம்: தைரியமாக சில முக்கிய முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னையில் உங்களுக்கு தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். இனிமையான நாள்.


meenamமீனம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். நல்லது நடக்கும் நல்ல நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here