Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 29/03/2016

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 29/03/2016

312
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: கார்த்திகை


mesahamமேசம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும் நாள்.


rishabamரிஷபம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


mithunamமிதுனம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வாகனம் தொந்தரவு தரும். உடல் அசதி, சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


kadakamகடகம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.


simamசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி அமைதி கிட்டும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வராது என்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள்-. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.


kanni

கன்னி: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


thulam

துலாம்: இன்று நீங்கள் சில வேலைகளை உங்கள் மேற் பார்வையில் முடிப்பது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.


viruchigamவிருச்சிகம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


dhanusuதனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.


magaram

மகரம்: உற்சாகமாக இருப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.


kumbam

கும்பம்: இன்று நீங்கள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக்கொண்டிருக்க வேண்டாம். முன்கோபத்தால் பகை உண்டாகும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.


meenamமீனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.