இன்றைய ராசிபலன் – செவ்வாய் 31/05/2016

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 31/05/2016

402
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.30 – 11.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்


mesaham

மேசம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வியாபாரத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து விலகும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


rishabam

ரிஷபம்: இன்று நீங்கள் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். வியாபாரத்தில் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். எதிர்பார்த்த பணம்  தாமதமாக வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


mithunam

மிதுனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.

நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். எதிர்பார்த்திருந்த  தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். உற்சாகமான நாள்.


kadakam

கடகம்: ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வரக்கூடும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.


simam

சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள். புது  வாகனம் வாங்குவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு  நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.


kanni

கன்னி: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

புது வேலை  அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.


thulam

துலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின்  அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும்  நாள்.


viruchigam

விருச்சிகம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில்  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகாரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.


dhanusuதனுசு: இன்று உங்களுக்கு சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்துப் போகும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


magaram

மகரம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மனைவிவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தாயார்  ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். போராடி வெல்லும் நாள்.


kumbam

கும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று  வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


meenam

மீனம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.  வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

NO COMMENTS

LEAVE A REPLY